2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தலதா பெரஹராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.

இந்த நிகழ்வில், பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும்  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X