Editorial / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்
பராபவ வருடப் பிறப்பை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அன்று (14) மன்னார் மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் மிக விமர்சையாக முன்னெடுக்கப்பட்டன.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி காலை 8:40 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி காலை 9:32 மணிக்கும் தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் இந்த வழிபாடுகள் இடம்பெற்றன. இதன்போது 108 சங்காபிஷேகம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மூலவருக்கு விசேட அலங்கார பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு இடம்பெற்ற இந்த விசேட பூஜைகளில் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட தெய்வங்களை வழிபட்டனர்.













அ. அச்சுதன்
'தட்சண கைலாயம்' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில், பராபவ வருடத் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று (14) செவ்வாய்க்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் மிக விமர்சையாக நடைபெற்றன.
புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இப்புண்ணிய தினத்தில் அம்பாளின் அருளாசியைப் பெறுவதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.





குருக்கள்மடத்தில்...
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு கிருஷ்ணன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட வழிபாடுகளில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறை தரிசனம் பெற்றனர். புத்தாண்டு பிறப்பினை ஒட்டி மூலவருக்கு விசேட அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.





5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago