2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Janu   / 2024 நவம்பர் 06 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பட்ரிக்  பாதுகாப்பு  செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்று (நவம்பர் 05) ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டே பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா மற்றும் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X