Editorial / 2024 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் புதன்கிழமை (21) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
1. டயானா மெக்கிவிசீன்(Diana Mickeviciene) – தூதுவர் – லிதுவேனியா குடியரசு
2. டிரின் தி டாம் (Trinh Thi Tam) – தூதுவர் – வியட்நாம் சோசலிசக் குடியரசு
3. மாலர் தன் டைக் (Marlar Than Htaik) – தூதுவர் – மியான்மார்
4. பெர்சி பெட்சன் சந்தா (Percy Patson Chanda) – உயர்ஸ்தானிகர் – சிம்பாப்வே
5. அண்டலிப் எலியாஸ் (Andalib Elias) – உயர்ஸ்தானிகர் – பங்களாதேஷ்
நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.






14 minute ago
44 minute ago
54 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
54 minute ago
55 minute ago