2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

‘எமது வேகப்பந்து வீச்சாளர்கள் உலகத் தரமிக்கவர்கள்’

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறிஸ்சேர்ச்சில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், எட்டு விக்கெட்டுகளால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், தமது வேகப்பந்து வீச்சாளர்களின் திறமை வெளிப்பாடுகள் உலகத் தரமிக்கவை என நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணி, எவ்வளவு திறமையான வேகப்பந்து வீச்சுக் குழாமைக் கொண்டிருக்கின்றது என்பதை அவரின் வார்த்தைகள் வெளிப்படுத்தின.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த வில்லியம்ஸன், எந்தவித சந்தேகமுமின்றி, இரண்டாவது இனிங்ஸில் தமது பந்துவீச்சே போட்டியைத் தீர்மானித்த பகுதியாக அமைந்ததாகக் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், நீண்ட நேரத்துக்கு சரியான இடங்களில் தமது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் பந்து வீசியமை உலகத் தரமிக்கது என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .