2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவராக கவாஸ்கர்

Menaka Mookandi   / 2014 மார்ச் 28 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இடைக்கால   தலைவராக சுனில் கவாஸ்கர் இந்திய உயர்நீதி மன்றத்தினால் நியமிகப்பட்டுள்ளார்.

ஏழாவது ஐ.பி.எல் தொடரின் காலத்தில் சுனில் கவாஸ்கர் இந்தப் பதவியில் இருப்பார் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகள் ஐ.பி.எல் தொடரில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் ஸ்ரீனிவாசனின் பதவியை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஜூலை மாதத்தில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் புதிய நிர்வாகத்தின்  முதல்  தலைவராக பதவி ஏற்க இருந்த நிலையில் ஐ.பி.எல் சூதட்டா முறைப்பாட்டின் விசாரணையில் இந்திய உயர்நீதி மன்றம் இந்த தீர்ப்பை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

ஐ.பி. எல் சம்மந்தப்பட்ட முக்காமைத்துவத்திற்கு மாத்திரமே சுனில் கவாஸ்கர் பொறுப்பாக இருப்பர் என்றும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபையின் முகாமைத்துவத்திற்கு அதன் உப தலைவர் யாதவ் பொறுப்பாக இருப்பார் என  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  சபையின் வழக்கறிஞர் இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .