2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உயர் நீதிமன்றில் டோனி மீது குற்றச் சாட்டு; டோனி மறுப்பு

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் சூதாட்ட விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி, நீதிபதி முகுல் முட்கலின் விசாரணைகளின் போது பொய் கூறி இருப்பதாக, மனுதாரரான பீகார் கிரிக்கெட் சம்மேளனத்தின் ஆதித்திய வர்மாவின் வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் குருநாத் மெய்யப்பன் வெறும் ஆதரவாளன் எனவும் அணி முகாமைத்துவதுடன் தொடர்பு அற்றவர் எனவும் கூறியுள்ளது பொய் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக நீதி மன்றம் இன்னமும் பதிலளிக்கவில்லை.

சென்னை சுபப்ர் கிங்ஸ் அணியின் உரிமையை இந்திய சீமென்ட் நிறுவனம் வைத்துள்ளது. அதன் தலைவர் ஸ்ரீநிவாசன். டோனி இந்திய சீமென்ட் நிறுவனத்தின் உப தலைவர். குருநாத் மெய்யப்பன் ஸ்ரீனிவாசனின் மருமகன். முரண்பாடுகளான கருத்துகளின் அடிப்படையில் டோனி தண்டிக்கப்பட்ட வாய்ப்புகள் இருப்தாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பங்களாதேஷில் நடைபெற்று வரும் உலக 20-20 தொடரின் போட்டிக்கு முன்னைய நாளில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் டோனி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டோனி மீது பொய் குற்றச் சாட்டு: உயர் நீதி மன்றம்
ஐ.பி.எல் விசாரணைகளின் போது டோனி பொய்யான தகவல்களை முகுல் முட்களின் தலைமையிலான குழுவுக்கு வழங்கினார் என்று நேற்றைய தினம் பீகார் கிரிக்கெட் சம்மேளனத்தின் ஆதித்திய வர்மாவின் வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்தது ஆதாரமற்றது என நீதி மன்றம் தெரிவித்துள்ளது. ஊடகங்களும் டோனி தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டுள்ளதாக நீதி மன்றம் மேலும் தெரிவித்துள்ளது. குருநாத் மெய்யப்பன் வெறும் ஆதரவாளர் மட்டுமே. அவருக்கு  சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையுடன் சம்மந்தம் இல்லை என தெரிவித்தாக செய்திகள் வெளியாகி இருந்தன. டோனி அவ்வாறு சொல்லவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இனி டோனி மீதான ஐ.பி.எல் ஊழல் தொடர்பான பேச்சுக்கள் குறையும் என நம்பலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .