2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

லலித் மோடி தேர்தலில் வெற்றி; ராஜஸ்தான் கிரிக்கெட் சபைக்கு தடை

A.P.Mathan   / 2014 மே 06 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் கிரிக்கெட் சபையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடைசெய்துள்ளது. இன்றைய தினம் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் ஆயுட்க்கால தடைக்கு உட்படுத்தப்பட்ட லலித் மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சபை தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதில் லலித் மோடி போட்டியிட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, அதற்க்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைகளுக்காக முடிவு அறிவிக்கப்பட்டாமல் இருந்த நிலையில் கடந்த 30ஆம் திகதி முடிவினை ஆறாம் திகதி அறிவிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்தது இருந்த நிலையில் இன்று காலை லலித் மோடி வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டார். 33 வாக்குளில் 24 வாக்குகளை அவர் பெற்று வெற்றி பெற்றார்.

ஐ.பி.எல் இல் பண மோசடிகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒழுக்காற்று குழுவினால் ஆயுட்கால தடைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதனை தொடர்ந்து,  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் 32 ஆம் இலக்க விதியின்  7 ஆம் சரத்துப்படி தங்கள் கட்டுப்பாட்டை மீறி ராஜஸ்தான் கிரிக்கெட் சபை  நடந்துள்ளமையினால் அவர்களை இந்திய கிரிக்கெட் சபையில் இருந்து தடை செய்வதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான் கிரிக்கெட் சபை இந்தியாவுடன் தொடர்புடைய கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இதன் மூலம் பாதிப்புக்கள் வருமா இல்லையா என்ற செய்திகள் இன்னமும் வெளியாகவில்லை.இருப்பினும் அதற்க்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவே நம்பப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .