2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அணிக்கு இலகு வெற்றி

A.P.Mathan   / 2014 மே 07 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கிடையில் அயர்லாந்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நுவான் குலசேகர ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களையும், அஷான் பிரியரஞ்சன் 31 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக ரிம் முட்டாக் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 36.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வில்லியம் போர்ட்டஷ்பீல்ட் 37 ஓட்டங்களையும், நைல் ஓ பிரையன் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக  சுரங்க லக்மால், அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நுவான் குலசேகர 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக அஜந்த மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .