Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லொக்கி பெர்கியூசனுக்கு முதற் குழந்தை பிறப்புக்காக நியூசிலாந்து திரும்புவதற்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை (17) நடைபெறவுள்ள கனடாவுக்கெதிரான நியூசிலாந்தின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ண குழுநிலைப் போட்டியைத் தவறவிடவுள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்துக் குழாமில் பெர்கியூசன் பிரதியிடப்படாததோடு, சுப்பர் 8 சுற்றுக்கு முன்னர் அவர் திரும்புவதே திட்டமென நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் றொப் வோல்டர் தெரிவித்துள்ளதுடன், தேவைப்பட்டால் குழாமுக்கு அழைப்பதற்கு பென் சியர்ஸ் மற்றும் கோல் மகொஞ்சி குழாமுடன் பயணிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .