Shanmugan Murugavel / 2016 நவம்பர் 23 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான உலகக் கிண்ணத்துக்கான அணிகளைத் தெரிவுசெய்வதற்காக, அணிகளுக்கிடையிலான வழக்கமான போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்கள் சம்பியன்ஷிப் தொடராகக் கருதப்படுகின்றன.
இவற்றில், இவ்வாண்டு ஓகஸ்ட் 1 முதல் ஒக்டோபர் 31 வரையான காலப்பகுதிக்குள் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவிருந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி பங்குபெறவில்லை. இரு அணிகளுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்தே இம்முடிவை அவ்வணி எடுத்தது.
இந்நிலையில், அப்போட்டிகளில் பங்குபற்றாமை, அப்போட்டிகளை இந்தியா கைவிட்டதாகவே கருதப்படும் எனத் தெரிவித்த ஐ.சி.சி, அந்தப் போட்டிக்கான புள்ளிகளை, பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago