Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஜேர்மனி, இங்கிலாந்து, போலந்து, வட அயர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
ஜேர்மனி, செக்.குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஜேர்மனி சார்பாக, தோமஸ் முல்லர் இரண்டு கோல்களையும் டொனி க்ரூஸ் ஒரு கோலினையும் பெற்றனர்.
இங்கிலாந்து, மோல்டா அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாக, டேனியல் ஸ்டரிட்ஜ், டெலே அல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.
போலந்து, டென்மார்க் அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போலந்து வெற்றி பெற்றிருந்தது. போலந்து சார்பாக பெறப்பட்ட மூன்று கோல்களையும் அவ்வணியின் தலைவர் ரொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருந்தார்.
இதேவேளை, ஏனைய போட்டிகளில், வட அயர்லாந்து, 4-0 என்ற கோல் கணக்கில் சான் மரினோவை வென்றதுடன், ஸ்லோவேனியா, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வென்றிருந்தது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago