Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தூரில் இன்று ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், விராத் கோலி, அஜின்கியா ரஹானேயின் மூலம், முதலாவது நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இத்தொடரில், மூன்றாவது முறையாகவும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராத் கோலி, மூன்றாவது முறையாகவும் தமது அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இந்திய அணியில், காயமடைந்த ஷீகர் தவான், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக, கெளதம் கம்பீர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றனர். குணமடைந்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் ஹென்றி நிக்கொல்ஸ், நீல் வக்னருக்கு பதிலாக இடம்பெற்றனர்.
இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவின்போது, மூன்று விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது.
தற்போது களத்தில், விராத் கோலி 103, உப அணித்தலைவர் அஜின்கியா ரஹானே 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, செட்டேஸ்வர் புஜாரா 41, இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அணியில் மீள்வருகையை நிகழ்த்திய கெளதம் கம்பீர் 29 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில், ஜீதன் பட்டேல், மிற்செல் சந்தர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago