Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், செல்சியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 74 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியுள்ளது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 56 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 55 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் உள்ளது. இதில் லெய்செஸ்டர் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளதுடன், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டும் 55 புள்ளிகளுடனுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது.
13 minute ago
34 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
1 hours ago
7 hours ago