2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டிய வைபவம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

'வீட்டில் சமாதானத்தை பேனுவதன் மூலம் உலக சமாதானத்தை பேனுவோம் எனும்' தலைப்பில் காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி யோகமலர் அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய சம்மேளனத்தின் திட்ட இணைப்பாளர் குகதாஸ், சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் தேசிய திட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம், மட்டக்களப்பு மாவட்ட இணையத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் உட்பட அதிகாரிகள் அதிதிகள் மட்டக்களப்பு காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் அதன் சுய அபிவிருத்தி குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது 'உன்னாள் முடியும் பெண்ணே' எனும் சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டதுன் காவியா பெண்கள் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் சுய தொழில் நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .