2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கண்ணகிபுரத்தில் 200 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதூசன்)
மட்டக்களப்பு கண்ணகிபுரத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அந்த பிரதேசத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடைமழை மற்றும் மினி சூறாவளியினால் பல வீடுகளின் மதில்களும் உடைந்து விழுந்துள்ளன. அதுமட்டுமன்றி மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளமையினால் அப்பிரதேசத்தில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாதாரணதரப்பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் இருளிலேயே பரீட்சைகள் எழுதுகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .