2026 மே 04, திங்கட்கிழமை

உணவு நஞ்சானதில் பல்கலை மாணவர் 25பேர் வைத்தியசாலையில் அனுமதி

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக  கல்லடி வளாகத்தின் மாணவர்கள் 25பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விடுதியில் தங்கியுள்ள இம்மாணவர்கள் இன்று மாலை கற்கைகள் நிறுவக உணவு விடுதியில் உணவு உட்கொண்டதை அடுத்தே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளனர்.

இவர்கள் உட்கொண்ட உணவு விசமானதை அடுத்தே திடீர் சுகவீனமுற்றுள்ளனர் என்று மட்டக்களப்பு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் மற்றும் நாவற்குடா பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த உணவு விடுதியை நிரந்தரமாக மூடிவிடுமாறு நிறுவகத்தின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .