Super User / 2011 மே 15 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடுவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் 23ஆவது போராளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எந்தவொரு தேர்தல் அரசியலிலும் தான் ஈடுபடாமல் கட்சியின் நலனுக்காக பாடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்த அரசியல் பீடத்தை கலைத்து விட்டு அதிலுள்ள அங்கத்தவர்களை கட்சியின் அதியுயர் பீடத்தில் சேர்ப்பதற்கு இதன் போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அதியுயர் பீடம் மற்றும் அரசியல் பீடம் என இரு பீடங்கள் இருந்தன. அரசியல் பீடத்திற்கு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தெரிவுசெய்யப்படுவர்.
இதற்கு மேலதிகமாக கட்சி பதவி வழி உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பீட உறுப்பினர்களும் கட்சியின் போராளர் மாநாட்டின் ஊடாக அதியுயர் பீடத்திற்கு தெரிவுசெய்யப்படுவது வழக்கம்.
ஆனால், இனி அரசியல் பீடத்தை கலைத்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சேகு இஸ்ஸதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பீ. பாருக் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளராக இருந்து கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரின் மகனான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் அதியுயர் பீடத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
3 hours ago
4 hours ago
ibnuaboo Tuesday, 17 May 2011 02:07 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே கடைசியில் கட்சி உத்தியோகத்தர்களாவது மிஞ்செட்டுமே.
Reply : 0 0
ameer Tuesday, 17 May 2011 08:22 PM
எத்தனை காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டில்
போலிகள் ஒருநாள் ஒழிந்துவிடும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago