2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாவட்ட காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ச்சி

Menaka Mookandi   / 2012 மார்ச் 22 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் உட்பட மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண காணி ஆணையாளர், காணி அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபையின் தீர்மானத்திற்கமைவாக கிழக்கிலுள்ள மாவட்டங்கள் தோறும் உள்ள காணிப் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு காணிக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கமையவே இக்கூட்டமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Noushard - Oddamavady Friday, 23 March 2012 05:29 AM

    மக்கள் தொகைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு நிலப்பகிர்வு இடம்பெறுமா ? உள்ள நிலத்தை உள்ளவர்களே உரிமை கொண்டாட உரிமை கிடைக்குமா ? நிலத்தொடர்பற்ற காணி கட்டுப்பாடு இல்லாமல் போகுமா ? நோக்கம் என்ன ?

    Reply : 0       0

    P.Sabeshan Saturday, 24 March 2012 01:49 AM

    makkal thohaikkum thevaikkum kanee valanhinal தெருவிலும்,கடலிலும், ஆற்றிலும் தான் பகிர்ந்து கொடுக்க வேண்டும். suyanalam karuthi kelvi கேட்க kudathu.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .