2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு முதலமைச்சர் பறங்கியாமடு கிராமத்திற்கு விஜயம்

Kogilavani   / 2012 மார்ச் 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் பறங்கியாமடு கிராமத்திற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அக்கிராமத்தில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.
சந்திவெளி, பறங்கியாமடுவை இணைக்கும் வீதியை புனரமைத்தல் மற்றும் கிராமத்தின் உள்வீதிகளுக்கு கிறவலிடல் தொடர்பான உடனடியாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் இதன்போது உறுதியளித்தபார்.

அத்தோடு ஆலயம் மற்றும் பாடசாலைக்கான உதவிகளும் வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரகாந்தான் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தா.உதயஜீவதாஸ், பிரதேச சபையின் உறுப்பினர் நடராஜா, வித்தியாலத்தின் அதிபர் சு.தியாகராஜா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின் செயற்குழு உறுப்பினர்களான வை.பஞ்சலிங்கம், பிரபா(கிரான்), கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆலய பரிபாலன சபையினர் ஆகியோர் கலந்துகொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .