2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூரில் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம்

A.P.Mathan   / 2012 மார்ச் 23 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


பொருளாதார அவிருத்தி அமைச்சினால் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் எனும் பணியின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை வீதிகளுக்கு கொங்கிறீட் இடும் பணியும், வடிகான்கள் புனரமைப்பு மற்றும் முன்பள்ளி பாடசாலை ஆரம்பிப்பு ஆகியன பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுதினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேபோன்று நகரசபை முதல்வர் அலிசாஹீர் மௌhலானாவினால் காட்டுப்பள்ளி குறுக்கு வீதிக்கு வடிகால் தடுப்பு சுவர் அமைக்கும் பணி மற்றும் மாவடி வீதிக்கு கொங்கிறீட் இடும் பணியையும் அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். கனீபா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Nahhasz Saturday, 24 March 2012 05:36 PM

    கிரேட் வொர்க்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .