2026 மே 04, திங்கட்கிழமை

தினசிங்கன்குளம் மக்களின் பாவனைக்கு கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,ரி.லோஹித்,எம்.சுக்ரி)

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட திக்கானவெளிக்குளம் தினசிங்கன்குளம் என பெயர் மாற்றப்பட்டு மக்களின் பாவனைக்கு நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கையளித்துவைத்தார். 
 
கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக காடுமண்டி தூர்ந்துபோய்  காணப்பட்ட இக்குளம் தொடர்பில்  முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து,   உடனடியாக  முதலமைச்சரின் 2011ஆம் ஆண்டிற்கான பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 14 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தினை ஓர் தமிழ் மன்னன் ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்குளத்திற்கு முதலமைச்சர் அம்மன்னனின் பெயரைச் சூட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .