2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியிலுள்ள மடுவத்தை மூட உத்தரவு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மாடு வெட்டும் மடுவத்தினை எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதியுடன் மூட வேண்டும் என காத்தான்குடி நகர சபைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்  நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன்,  இந்த மடுவத்தை சுகாதார ரீதியாக பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறு கவனிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி, காத்தான்குடி நகர சபைக்கு பணித்தார். 

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மாடு வெட்டும் மடுவத்தை  மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரி  இவ் மடுவத்தினை சுற்றி வசிக்கும் மக்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிமன்றத்தில் கடந்த வருடம் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதி எம்.அப்துல்லா,   கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் இந்த மடுவத்தை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து காத்தான்குடி நகர சபை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த வருடம்  மேன்முறையீடு செய்திருந்தது.

இந்த நிலையில் காத்தான்குடி நகர சபையின் மேன்முறையீடு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகயுடன் மூட வேண்டும் என காத்தான்குடி நகர சபைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி நகர சபை, இந்த மாடு வெட்டும் மடுவத்தினை வேறு ஒரு இடத்தில்  நவீன முறையில் அமைக்கும் வரையில்  மடுவத்தினை பாவிப்பதற்கு மூன்று மாத காலம் அவகாசம் தருமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .