2026 மே 04, திங்கட்கிழமை

வாகரையில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டார்: மூவர் கைது

Super User   / 2012 மார்ச் 31 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

5மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளினால் கடத்தப்பட்ட 21 வயது இளைஞரை மீட்ட பொலிசார், சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.

பால்சேனை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் ஆனந்தகிசோர் என்ற குறித்த இளைஞன் சம்பவதினம் வீட்டிலிருந்த வேளை வாகனமொன்றில் வந்த ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லபட்டிருந்தார்.

சேருவிலை பிரதேசத்திலுள்ள தெகியத்தை கிராமத்தில் இந்த இளைஞரை மீட்ட போது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் சாரதி ஒருவர் சிங்களவர் என்றும் ஏனைய இருவரும் அதியமான்கேணியைச் சேர்ந்த தமிழர்கள் என்றும் இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சானரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார்.

வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிசாரின் புத்தி சாதுரியமான நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் கிடைத்த தகவல்களை வைத்தே இந்த நடவடிக்கை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், கடத்தல்காரர்கள் கோடிக் கணக்கில் கப்பம் கோரியதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கடத்தல் சம்பவத்திற்கு அரசியல் பின்னணி இருப்பதாக வெளியான செய்திகளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முற்றாக : நிராகரித்தார். (மூலம்: பிபிசி)

தொடர்புடைய செய்தி:

வாகரையில் இளைஞர் கடத்தல்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .