2026 மே 04, திங்கட்கிழமை

சிலைகள் உடைக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவு

Super User   / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் மகாத்மா காந்தி உட்பட பலரின் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரவித்துள்ளது.

'மட்டக்களப்பு நகரில் பல்வேறு முக்கிய சிலைகள் உடைக்கப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இம்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறும் இச்சம்பவத்தின் குற்றவாளிகளையும் நோக்கங்களையும் இனங்காணுமாறு  பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்' என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வேறு இரு உள்ளூர் பிரமுகர்களின் சிலைகளும் வியாழனன்று தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கான பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என அச்சம் நிலவியது. (ஸின்ஹுவா)


  Comments - 0

  • AJ Saturday, 07 April 2012 11:01 PM

    HEHEHE GOOD COMEDY. WHY THIS ATTACK? FOR UNHRC VOTE ? SHAME ON LANKA.

    Reply : 0       0

    roma Sunday, 08 April 2012 06:15 AM

    வை திஸ் சிலை வெறி,,,,,,,,

    Reply : 0       0

    aussilan Sunday, 08 April 2012 06:46 PM

    AJ, actually we don't need Gandi at all !!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .