2026 மே 04, திங்கட்கிழமை

காலி சிறைச்சாலையில் தமிழ் கைதி மீது தாக்குதல்; அரியநேத்திரன் எம்.பி. புகார்

Super User   / 2012 ஏப்ரல் 17 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

காலி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் கைதி ஒருவர் மீது கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் ஏனைய சிறைக்கைதிகள் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறித்து தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பா.அரியநேத்திரனின் மேலும் தெரிவிக்கையில்,

'செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த சுந்தரம்பிள்ளை சுபாஸ்கரன் (31வயது) என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு காலி துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவரது வழக்குகள் காலி நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் அங்குள்ள சில சிங்கள சிறைக்கைதிகளினால் அவர் மிக கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் பிளேட்டினாலும் கைகளில் கீறியுள்ளனர்.

இவர் தாக்கப்பட்டது தொடர்பில் என்னிடம் முறையிட்டுள்ளதுடன் அவரை அங்கிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்ற உதவுமாறும் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளேன். அவர் இது தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .