2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டு.விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில்; நடைபெற்ற இச்சந்திப்பில், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.அருன் தம்பிமுத்து உட்பட விளையாட்டு உத்தியோகத்தர்கள் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்குமாகாணத்தின் சர்வதேச விளையாட்டரங்குகளாக 300 மில்லியன் ரூபாய் செலவில் இரு விளையாட்டு மைதானங்கள்  புனரமைக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்தோடு விளையாட்டுக்கழகங்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .