2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்திக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலர் பங்கேற்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான், ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கொண்ட  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாநகரசபையால் நகர அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன்  மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்தி தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.  மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,   மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட திணைக்களத் தலைவர்களிடம் பாதுகாப்புச் செயலாளர் கேட்டறிந்துகொண்டார்.

அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதி அமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட மாநகர மேயர் சிவகீத்தா பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

2030 வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு மாநகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், 28 இணைத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முதலில் 7 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அதன்படி, மட்டக்களப்பு கோட்டை, விமான நிலையம், வெள்ளைப்பாலம், காந்தி சதுக்கம், வெபர் மைதானம், மட்டக்களப்பு வாயில் உள்ளிட்ட பகுதிகள்; புனரமைக்கப்படவுள்ளன.

விமானநிலையமானது  இரண்டு பில்லியன் செலவிலும், ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் மற்றும் 25 ஏக்கரில் 250 மில்லியன் செலவில் கைத்தொழில் பேட்டை ஒன்றுமட் அமைக்கப்படவுள்ளதுடன், மட்டக்களப்பு நகரிலுள்ள பாலங்கள் அகலமாக்கப்பட்டு 1.2 பில்லியன் செலவில் புனரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .