2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஆட்சியிலேயே ஜனநாயகம் கிடைத்தது'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)

'எமது நாட்டில் தொலைந்து போன ஜனநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஆட்சியிலியே எமக்குக் கிடைத்தது. அந்த ஜனநாயகத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்' என கலைக்கப்பட்ட கிழக்க மாகாண சபையின் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

முதற்தடவை கிழக்கு மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியது போல் இரண்டாவது தடவையாகவும் கைப்பற்றுவதில் எவ்வித மாற்றமும் இல்லையென்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் காரியாலயம் வாழைச்சேனை பேத்தாளை கிராமத்தில் நேற்று செவ்வாயக்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

'தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து உணர்வு பூர்வமான வார்த்தைகளைக் கூறி எமது வாக்குகளைப் பெற்றுச் சென்றால் அடுத்த தேர்தலுக்கு வந்து எம்மைச் சந்திப்பவர்கலெல்லாம் இம்முறை மாகாண ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக பகல் கணவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். மக்கள் எல்லோரையும் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள். யார் மக்களின் சேவகன் என்று அவர்களுக்குத் தெரியும். அதனாலயே சொல்கிறேன் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தை நிச்சயம் கைப்பற்றும்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .