2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மங்களகம கிராமத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசத்தில் உள்ள சிங்களக் கிராமமான மங்களகம கிராமத்தில் 'தேசத்திற்கு மகுடம்' திட்டத்தின் கீழான அபிவிருத்திப் பணிகளை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய இந்தக் கிராமத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மங்களகம கிராமத்தில் 5 கோடி ரூபா  செலவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .