2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

சமூகச் செயற்பாட்டு வெளியீடுகளும், காட்சியும் பகிர்வும் கொண்டாட்ட நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், சமூகச் செயற்பாட்டு வெளியீடுகளும், காட்சியும்  பகிர்வும் கொண்டாட்டமும் எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் மட்டக்களப்பு பயினியர் வீதி வாகை மர நிழலில் நடைபெறவுள்ளது.

முற்பகல் 10 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெவுள்ள இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ், மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம், மூன்றாவது கண்- உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக்குழு, மறுகா- புதிய தலைமுறைக்கான உடைப்பு, காகம் ஆகிய அமைப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடைபெறும் சமூகச் செயற்பாட்டு வெளியீடுகளும், காட்சியும் பகிர்ஷவும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .