2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பெண்கள் அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கீடு: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 01 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
பெண்கள் அபிவிருத்திக்கென பல்வேறு அமைச்சுகளுக்கூடாக கணிசமான அளவு நிதியை அரசாங்கம் வருடாந்தம் ஒதக்குகின்றது. சுகாதார, சமூக வேவைகள், பொருளாதார அபிவிருத்தி, கல்வி உள்ளிட்ட பல அமைச்சுக்களுக்கூடாக அரசு தனது வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதியை ஒதுக்கி பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பெண்களின் அபிவிருத்திக்கென அரசாங்கம் மிகக் குறைவான நிதியை ஒதுக்கியிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பில்  கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பெண்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை எங்களுடைய அமைச்சு நேரடியாக அமுல்படுத்துவதில்லை. சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சானது மகளிர் மற்றும் சிறுவர் தொடர்பாக ஏனைய அமைச்சுக்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாகக் கொள்ளைகளை வகுத்துக் கொடுப்பதுதான் இந்த அமைச்சின் பணியாகும்.

நாட்டின் பொருளாதார நிலைக்கேற்ப  பெண்களின் அபிவிருத்திக்கென்றும் கணிசமான அளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. அதேவேளை இன்னும் கூடுதலான நிதி பெண்களின் அபிருத்திக்கென ஒதுக்கப்பட்டால் அதனைக் கொண்டு பெண்களின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .