2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி சடலமாக மீட்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்
)
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவின் மாங்காடு தீர்த்தக்கரை வீதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து மாணவியின்; சடலம் நேற்று மாலை மீட்கப்படடுள்ளது.

17 வயதுடைய சுலேந்திரன் வினோதினி என்ற மாணவியின் சடலமே வீட்டின் அறையொன்றினுள் இருந்து  மீட்கப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

' க.பொ.த (சா.த) பரீட்சைக்கு தோற்றுகின்ற இந்த மாணவி பரீட்சையை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பி மறுநாள் பாடத்திற்கு ஆயத்தம் செய்ததுடன் தனது சகோதரியோடு விளையாடியுள்ளார். விளையாடிக்கொண்டிருந்த இவர் திடீரென காணாமல் போயுள்ளார். இதனையடுத்தே முற்றத்தில் இருந்த தாய் இவரை தேடியபோது அந்த மாணவி வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .