2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தந்தையை இழந்த மாணவர்களுக்கு கல்விக்கான நிதியுதவி

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் சமூக சகவாழ்வு மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தினால் தந்தையை இழந்த வறிய மாணவ மாணவியருக்கு நிதி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது.

நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நஸீரின்; ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி இஷட். எல்.எம்.ஆப்தீன், மற்றும் அலிகார் தேசியக் கல்லூரியின் ஆசிரியை எஸ்.எச். பரீனா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்கினர்.

பல்வேறு காரணங்களின் நிமித்தம் தமது தந்தையை இழந்த வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக ஏறாவூர் சமூக சுகவாழ்வு மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தினால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வருடாந்தம் ஒரு மாணவருக்கு தலா 20 ஐயாயிரம் ரூபாய் அன்பளிப்பாக கிடைத்து வருகின்ற இந்த நிதி உதவியினால் பல வறிய மாணவ மாணவிகள் நன்மையடைந்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .