2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

குருநாகல் மாவட்ட இளைஞர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் இனங்களுக்கு இடையே பரஸ்பர நட்புறவை பரிமாறிக்கொள்ளும் இளைஞர் பரிமாற்றுத் திட்டத்திற்கமைவாக குருநாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர் யுவதிகள் ஐம்பது பேர் கொண்ட குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்கியிருப்பார்கள் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இவ்விளைஞர் யுவதிகளை வரேவேற்கும் நிகழ்வு எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின கிழக்கு மாகாண பயிற்றுவிப்பாளர் கே.தவராஜா உட்பட இளைஞர்சேவை உத்தியோகஸ்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பெதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குருநாகலிலிருந்து வந்த சிங்கள இளைஞர் யுவதிகள் மாவட்டத்திலுள்ள மக்களின் கலை காலாசார பண்பாட்டு, அம்சங்களை பகிர்ந்து கொள்வதுடன் மட்டக்களபு மாவட்டத்திலுள்ள மதஸ்தலங்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் மாவட்டத்தின் முக்கியமான இடங்களை சுற்றிக் காண்பிக்கவுள்ளதாகவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திக் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .