2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடி காழி நீதிபதி ராஜினாமா

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

காத்தான்குடி காழி நீதிபதியான ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.ஹிழ்ர் ஜே.பி. தனது காழி நீதிபதி பதவியை உடனடியாக ராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக தொடர்ந்து தெரிவிக்கையில்...

15.12.2012 முதல் காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் வேண்டுகோளை கருத்திற் கொண்டும், எனது சுய விருப்பத்தின் பேரிலும் எனது காழி நீதிபதி பதவியினை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்பதையும் இன்று சனிக்கிழமை காழி நீதிமன்றம் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னிடம் தாபரிப்பு பணம் செலுத்தியவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும், வங்கி கணக்கு புத்தகங்களை பெறவேண்டியவர்கள் என்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வளவு காலமும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என காழி நீதிபதி ஏ.எம்.ஹிழ்ர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • manal Saturday, 15 December 2012 03:30 PM

    மிக நல்லது செய்தார்கள்.... நன்றி

    Reply : 0       0

    Pathmadeva Sunday, 16 December 2012 05:54 AM

    நான் அறிந்தவரை ஊடகங்களில் மற்றும் வேறு ஆவணங்களில் “காதி நீதிமன்றம்“ என்ற பதமே பாவனையிலிருந்து வந்துள்ளது. அதை “காழி“யாக மாற்றியிருக்கிறீர்கள்! ஏன் இந்தத் திடீர் மாற்றம்?

    குறிப்பு:
    இது ஓர் அரபு சொல். இதனை முழுமையாக தமிழில் மொழிபெயர்க்க முடியாது. அதன் உச்சரிப்பு “ழி” பதத்திலேயே அமையும். ஆனால், தமிழில் இதனை உச்சரிப்பவர்கள் “தி” என்ற பதத்தினை பயன்படுத்துகின்றனர். உண்மையில் “ழி” என்ற உச்சரிப்பே சாலப்பொருந்தும்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .