2026 மே 04, திங்கட்கிழமை

அருட்தந்தை த.சிறிதரன் சில்வஸ்டரின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள்

Kogilavani   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


திருமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளரும் முன்னாள் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் அருட்தந்தை .சிறிதரன் சில்வஸ்டரின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஆலையடிச்சோலை சேமக்காலையிலுள்ள அருட்தந்தையின் கல்லறைக்குச் சென்ற எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை கிறைற்றன் அவுட்ஸ்கோன், உத்தியோகத்தர்கள், குடும்பத்தினர் மலர் அஞ்சலி செலுத்தி ஆத்மப்பிரார்த்தனை மேற்கொண்டனர்.

13 வருடங்கள் கடமையாற்றிய  அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்ரின் ஆத்ம இளைப்பாற்றுக்கான திருப்பலி தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் அருட்பணி கிங்ஸ்லி றொபட் தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து, மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .