2026 மே 04, திங்கட்கிழமை

இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் கிளை மட்டக்களப்பில் திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 12 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் 15ஆவது கிளை மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று முன் தினம ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

புதிய காத்தான்குடியில் நடைபெற்ற கிளையினை அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவி தேசமானிய மக்கியா முஸம்மில் மற்றும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா, இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்த்தர்கள், நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த அமைப்பானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை கொண்டுள்ளது.

கொழும்பு, புத்தளம், சிலாபம், உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இதன் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் பெண்களுக்கு இந்த அமைப்பின் மூலம் பல்வேறுவகையான சமூக சேவைகள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரம் போன்ற வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவாக அதன் தலைவி மக்கியா முஸம்மில் தெரிவித்தார்.

இதன்போது  காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .