2026 மே 04, திங்கட்கிழமை

சிறுவர் விடயங்களை கையாள்வது தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


கே.எஸ்.சசிகுமார், சக்திவேல்,தேவ அச்சுதன்


'சிறுவர்கள் தொடர்பான விடயங்களை எவ்வாறு கையாள்வது' என்பது தொடர்பிலான கலந்துரையாடலும் பயிற்சியும் நேற்று வவுணதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே சிறுவர்கள் பெண்களது பிரச்சினையினை எவ்வாறு கையாள்வது, அது தொடர்பான செயதி;களை எவ்வுhறு அறிக்கை செய்வது, சிறுவர்கள் மத்தியில் காணப்படும் ஆக்கத் திறன்களை எவ்வாறு வெளிக்கொணர்வது என்பது தொடர்பிலான கலந்துரையாடலும் பயிற்சியும் இதன்போது இடம்பெற்றது.

பிரதேச செயலக சிறுவர் நன்னடத்ததை பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் வை.எம்.சீ.ஏ நிறுவனங்களின் அனுசரணையில் பிரதேச செயலாளர் வெ.தவராசா தலைமையில் நடைபெற்ற இச்செயமலர்வில் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட சிறுவர்கழகங்களின் பிரதிநிதிகள், மாவட்ட ஊடகவியலாளர்கள், சிறுவர்கள் தொடர்பில் கடமைபுரியும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறுவர்கள் தொடர்பில் சேவை செய்யும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .