2026 மே 04, திங்கட்கிழமை

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் இந்தியா விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும்  2013ஆம் ஆண்டுக்கான தெற்காசிய நாடுகளின் காலநிலை மாற்றம் சம்பந்தமான மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா சென்றுள்ளார்.

இலங்கையில் இருந்து போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹண திசாநாயக்காவின் தலைமையில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளனர்.

2013ஆம் ஆண்டுக்கான தெற்காசிய நாடுகளின் காலநிலை மாற்றம் சம்பந்தமாக புதுடில்லியில் உள்ள ஹோட்டல் இம்பேரியலில் இன்று புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் இந்த மகாநாடு இடம்பெறுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .