2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தின் பல பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் மின் வெட்டு

Super User   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

திருத்த வேலைகள் காரணமாக எதிர்வரும் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மட்டக்களப்பு மின் அத்தியட்சகர் எச்.எம்.எம். றியாழ் தெரிவித்தார்.

வாழைச்சேனையிலிருந்து தொடங்கி பிள்ளையாரடி வரையும் இந்த மின் துண்டிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை திருத்த வேலைகளுக்காக மின் துண்டிப்பு அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, கல்குடா, பாசிக்குடா, கும்புறுமூலை, கிரான், சந்திவெளி, முறக்கொட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவெம்பு, வந்தாறுமூலை, களுவன்கேணி, கொம்மாதுறை, செங்கலடி, பதுளை வீதி, கொடுவாமடு, இலுப்படிச்சேனை, கரடியனாறு, மரப்பால், உறுகாமம், பெரியபுல்லுமலை, ஏறாவூர், மிச் நகர், சத்தாம் ஹுஸைன், ஐயங்கேணி, தளவாய், புன்னைக்குடா, சவுக்கடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, மைலம்பாவெளி, தன்னாமுனை, சத்துருக்கொண்டான் மற்றும் பிள்ளையாரடி ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிப்புக்கு உள்ளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை வெள்ளிக்கிழமை ஏறாவூர் புன்னைக்குடா வீதி நிர்மாண பணிகள் காரணமாக ஏறாவூரின் புன்னைக்குடா வீதி, மக்காமடி, மிச்நகர், சத்தாம் ஹுஸைன், ஐயங்கேணி, தளவாய், சவுக்கடி போன்ற பிரதேசங்கள் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை மின் தடைக்கு உள்ளாகும் என மின் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .