2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

4 குருமார்கள் முழுநிலை குருக்களாக அருட்பொழிவு

Super User   / 2012 நவம்பர் 27 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 198 வருட வரலாற்றின் ஒரு படியாக இன்று செவ்வாய்க்கிழமை நான்கு குருமார்கள் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முழுநிலை குருக்களாக அருட்பொழிவு பெற்றனர்.

மெதடிஸ்த திருச்சபையின் தலைவர் பேராயர் பேரருள் அ.வி.ஜெபநேசனினால் மட்டக்களப்பு, கோட்டைமுனை மெதடிஸ்த ஆலயத்தில் இந்த ஆராதனை இடம்பெற்றது.

நுவரெலியாவை சேர்ந்த அருள் திரு. செங்கன் தேவதாசன், மட்டக்களப்பை சேர்ந்த அருள் திரு. டானியல் வினோத் சபாபதி, மன்னாரை சேர்ந்த அருள் திரு. பாலரட்ணம் மனோரஞ்சன் மற்றும் கல்முனையை சேர்ந்த அருள் திரு.குணரட்னம் குனாளன் ஆகியோரே இவ்வருடம் குருத்துவ அருட்பொழிவு பெற்றவர்களாவர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .