Princiya Dixci / 2021 மே 04 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் புடவைக் கடைகளில் பொருட்கள் மற்றம் புதிய ஆடைகள் கொள்வனவுக்காக சனக் கூட்டம் காணப்பட்டால், அந்த வர்த்தக நிலையம் உடனடியாக மூடப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்படுமென காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோன்புப் பெருநாள் காலம் என்பதால் புடவைக் கடகைள் உட்பட சில வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் புதிய ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு அதிகமானோர் ஒன்று சேர்வதைத் தடுக்கும் பொருட்டு, சுகாதார அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதனை காத்தான்குடி சுகாதார அலுவலக வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு காணப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago