Princiya Dixci / 2021 மே 05 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து, பிரதேச செயலகம், இன்று (05) மூடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60க்கும் மேற்கொள்ளப்பட்டவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளில் 12 உத்தியோகத்தர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றிலிருந்து பொதுமக்களுக்கான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 12 பேர் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது அப்பிரதேசத்தில் எல்லை மீறிச்செல்லும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்.
அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .