Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
உலக வங்கியின் 5 மில்லியன் ரூபாய் நிதி அனுசரணையுடன் அமைக்கப்படவுள்ள மட்டக்களப்பு - கொக்குவில் சந்தை கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
பொதுமக்களின் நலன் கருதி, அப்பகுதி மக்கள் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், வியாபாரிகள் தமது பொருட்களை பாதுகாப்பாக விற்பனை செய்யவும் அமைக்கப்படவுள்ள குறித்த சந்தை கட்டடம் பயனுள்ளதாக அமையவுள்ளது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நடும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டி வைத்து, குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026