2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'அருகிவரும் பாரம்பரிய கலைகளை ஆவணப்படுத்த வேண்டும்'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மலையகத்தில் அருகி வரும் பாரம்பரிய கலைகள், ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் பரம்பலுக்கு, பல்கலைக்கழகமொன்றில் தனி அலகு ஏற்படுத்தப்பட வேண்டும்' என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

' ஒரு சமூகத்தின் பாரம்பரிய கலைகளை இன்னொரு சமூகத்துக்கு எடுத்துக்கூறவேண்டிய தேவையுள்ளது. மலையக சமூகத்துக்கே உரிய பாரம்பரிய கலைகள் உள்ளன.

அவற்றில் குறிப்பாக கூத்துக்கள் என்பது முக்கியம் பெறுகின்றன. காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், கெங்கை அம்மன் போன்ற பலவகையான கூத்துக்கள் உள்ளன. அத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், காவடி, கரகம் மற்றும் தப்பிசை போன்ற பல அரிய கலைகளும் உள்ளன.

ஆனால், இந்த கலைகள் அனைத்தும் இன்று அருகி வருகின்றன. இவற்றில் பலவற்றை நாங்கள் இன்று காணமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இவற்றை பாதுக்காக்க வேண்டும். இவற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்காக இவை எழுத்துருவில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, இக்கலைகளை பரம்பல்செய்வதற்கு பல்கலைக்கழகமொன்றில் தனி அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். இக்கலைகள் எமது நாட்டின் பெருமைக்குரிய அங்கங்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .