Kogilavani / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு, முழுமையான அதிகாரத்தை வழங்குவதுக்;கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கவுள்ளதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார தசநாயக்க தெரிவித்தார்.
'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேயுள்ளார். ஆனால், எமக்கு கட்சியின் மூலமாக எவ்விதமான நன்மைகளும் கிடைக்கவில்லை. எனவே, ஜனாதிபதியிடம் கதைத்து, கட்சியின் அமைப்பாளர்களுக்கும் முழுமையான அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்க ளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று, நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'இன்று எல்லா இடத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும் அவர்களது அமைப்பாளர்களுமே செல்வாக்கு செலுத்துகின்றனர். இந்த நிலைமை மாற்றமடைய வேண்டும். எமது கட்சியின் தலைவராக ஜனாதிபதி இருந்தாலும், எமக்கு அதன் மூலமாக எந்த நன்மையும் கிட்டவில்லை. எனவே, அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகள், வரப்பிரசாதங்கள் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும்.
அந்த நிலைமை ஏற்படுகின்றவரை, எமது கட்சியின் உட்பூசலை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. கட்சியில் பிளவுபட்டுள்ள அங்கத்தவர்களை ஒன்று சேர்க்கவும் முடியாது' என அவர் மேலும் கூறினார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago