2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

“தமிழர்களின் அசமந்தபோக்கே பின்னைடைவுக்கு காரணம்”

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

மத்திய மாகாணத்தின் தமிழ் கல்வி அமைச்சிலுள்ள அதிகாரிகளின் அசமந்தப் போக்கே, மலையக கல்வி வளர்ச்சி பின்னடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் வே.ராஜாராம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்கள்,

' மத்திய மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தில் இரண்டு தமிழர்கள், 36 முஸ்லிம்கள், 512 சிங்களவர்கள் நியமனம் பெற்றனர்.  இந்த பட்டதாரிகள் நியமனத்தில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். இது தொடர்பாக நான் ஆளுநரையும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும் தொடர்புக் கொண்டு கேட்டப்பொழுது,  இந்நியமனத்துக்காக தமிழ் அதிகாரிகள், முறையான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை என என்னிடம் தெரிவித்தனர்.

550 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குகின்ற போது எமது அதிகாரிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் இவ்விடயத்தை ஆகக் குறைந்தது எமது கவனத்துக்கேனும் கொண்டு வந்திருக்கலாம்' என்றார். 

'இவ்வாறு தமிழ் அதிகாரிகள் செயற்படுவதன் காரணமாகவே எமது சமூகத்துக்கு  கிடைக்க வேண்டிய பல விடயங்கள் கிடைக்காமல் போகின்றன. இத்தகைய அதிகாரிகள் இருக்கின்ற வரையில் எமது கல்வியை முன்னேற்ற முடியாது. அமைச்சின் மூலம் எவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை அதிகாரிகள் நன்கு அறிந்து வைத்திருப்பர்.  

இவ்விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட முடியாவில்லை எனில் அது தொடர்பாக எமது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். நாங்கள் முதலமைச்சரையும் ஆளுநரையும் சந்தித்து எமது சமூகத்தை சார்ந்த பட்டதாரிகளையும் நியமித்திருப்போம்' என அவர் மேலும் கூறினார்.

'எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நியமனங்களையாவது முறையாக பெற்றுக் கொடுக்க அதிகாரிகள் நடவவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பான்மையைச் சேர்ந்தவர்கள் வழங்க தயாராக இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொடுக்க எமது அதிகாரிகள் தயாராக இல்லை என்பது மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.

எதிர்காலத்தில் அதிகாரிகள் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்' எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .