2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'நல்லாட்சி அரசாங்கம் ஒற்றுமையை வலியுறுத்துகின்றது'

Kogilavani   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

'கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் சிலைகளை பிரதிஷ்ட்டை செய்திருந்தால் இன முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கும். தற்போதைய அரசாங்கம், ஒற்றுமையை வலியுறுத்துவதனால் இத்தகைய திருவள்ளுவர் சிலைகளை பிரதிஷ்ட்டை செய்ய முடிகின்றது' என இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 14 திருவள்ளுவர் சிலைகளில் முதலாவது சிலை, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில், பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

'மனிதன் மனிதனாக வாழ அறநெறிகளை பின்பற்ற வேண்டும். எவர் எந்த சமயத்தைச்  சார்ந்தவராக இருந்தாலும் அவர் அவர்கள் மதத்தில் கூறப்பட்டவாறு சமய நல்லொழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான சிலைகளை பிரதிஷ்ட்டை செய்ய முற்பட்டிருந்தால்  இனங்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும்.  இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஒற்றுமையை மட்டும் வலியுறுத்துவதனால், இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலும்,  பாரிய ஒற்றுமை நிலவுகின்றது. இந்த ஒற்றுமை தொடர வேண்டும்' என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .