2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வாக, சில முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையொன்றை தொழில் அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் இம்முன்மொழிவுகளின்படி தொழிலாளர்களின் சம்பளத்தைப் பேசித் தீர்மானிக்கவுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இம்முன்மொழிவுகளை தொழிலமைச்சுக்கு கடந்த வாரம் சமர்ப்பித்தாகவும் அவர் கூறினார்.

'தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, மீண்டும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ளது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்துக்குமிடையில் நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் மேற்படி முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. நாளையப் பேச்சுவார்த்தையில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .